வரலாறு படைத்த சாம்பியன் பிரக்ஞானந்தா – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வரலாறு படைத்த சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அமெரிக்காவில் நடைபெற்ற Grand Chess Tour போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று, இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் பிரக்ஞானந்தா அவர்கள்!

தனது அசாத்திய திறமை, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் உலக சதுரங்க அரங்கில் இந்தியாவின் கொடியை உயரப் பறக்கச் செய்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள பிரக்ஞானந்தா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

உங்கள் வெற்றி தமிழ்நாட்டின் பெருமை, உங்கள் சாதனை இந்தியாவின் பெருமை!
இன்னும் பல வரலாற்று வெற்றிகளைப் படைத்து, உலக அரங்கில் இந்தியாவின் புகழை மேலும் உயர்த்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.