ஓபிசி ஆணையத்தின் தலைவர் பதவி; மத்திய அரசுக்கு திமுக எம்பி கடிதம்

ஓபிசி ஆணையத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி திமுக எம்பி வில்சன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு…

ஓபிசி ஆணையத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி திமுக எம்பி வில்சன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நிரப்பப்படாததாலும், 9வது ஆணையம் நடைமுறைக்கு வராததாலும், செயல்படாமல் உள்ளது. இந்த ஆணையத்தின் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பி, ஆணையத்தை மறுசீரமைக்க ஏந் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதற்கு எந்த காரணமும் இல்லை. அரசாங்கத்தின் செயலற்ற தன்மை காரணமாக, அரசியலமைப்பு அமைப்பின் செயல்பாடகள் முடங்கியுள்ளது.

இந்த அமைப்பானது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களைப் பாதுகாப்பதுடன், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், பின்தங்கியுள்ள வகுப்பினரை அடையாளம் காண்பது மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்காக உரிய புகார்களை விசாரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த நிரந்தர அமைப்பு அமைக்கப்படாததால் ஓபிசி சமூககங்கள் தொடர்பான கவனிக்கப்படாத பிரச்னைகள் குவிவதற்கு வழிவகுத்துள்ளது. மேலும் ஆணையமானது அதன் அரசியலமைப்பு கடமைகளை செயல்படுத்துவதற்கும், நிறைவேற்றுவதற்கும் ஏதுவான ஒரு நிலையில் இல்லை. இது மத்திய அரசு ஓபிசிக்கு எதிரான மனநிலையைப் பெற்றுள்ளதா மற்றும் அரசியலமைப்பு அமைப்பை முடக்கி, அதை செயலற்றதாக்க விரும்புகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

அரசமைப்பு சட்டப்பிரிவு 338பி மற்றும் 340ன் கீழ் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முக்கிய பங்காற்றுகிறது. எனவே இந்த ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை கூடிய விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுத்து, ஆணையம் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.