முக்கியச் செய்திகள் தமிழகம்

சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனே பணி நியமனம் வேண்டும்: திருமாவளவன் 

சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியின்போது பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் பதிவு மூப்பு முறையில் நடைபெற்று வந்தன. 2009, 2010 ஆம் ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர் என்று கூறினார்.

அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களில் 5000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1258 பட்டதாரி தமிழாசிரியர்கள்  இன்னும் பணிநியமனம் செய்யப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். பின்னர், அதிமுக தலைமையிலான  அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை நடைமுறைக்கு கொண்டுவந்ததாக சுட்டிக்காட்டிய அவர், இதனால் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு பணி கிடைக்காமல் பாதிப்படைந்த ஆசிரியர்கள் சென்னை மற்றும் மதுரையில்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து (TET) விலக்கு பெற்றனர்.

ஆனாலும் இதுவரையில் அவர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்படாமல்  புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.  அவர்களுக்கு வேலை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் திருமாவளவன்.

Advertisement:
SHARE

Related posts

மலையாளம் பிக்பாஸ் செட்டிற்கு வருவாய் துறையினர் சீல் வைப்பு!

Hamsa

புதுச்சேரியில் காங். அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்!

Saravana

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜிலேபி, முறுக்கு விலை உயர்வு

Ezhilarasan