முக்கியச் செய்திகள் இந்தியா

ஒமிக்ரான் அச்சுறுத்தல்; 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய சுகாதாரக் குழு

அதிகரிக்கும் ஒமிக்ரான் அச்சுறுத்தலையடுத்து மத்திய அரசின் மருத்துவக்குழுக்கள் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைந்துள்ளன.

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது 415 ஆக அதிகரித்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள் மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கு தனது குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா, பீகார், ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு இந்த குழுக்கள் பயணிக்கும்.

முன்னதாக பஞ்சாப் மற்றம் உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் அடுத்த 2 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒமிக்ரான் அச்சுறுத்தலால் தேர்தலை 2 மாதங்கள் வரை தள்ளி வைக்க முடியுமா என பிரதமர் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் அலகாபாத் உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

மறுபுறம் மத்திய அரசின் மருத்துவக் குழுவானது, மாநில அரசின் சுகாதாரத்துறையுடன் இணைந்து பரிசோதனைகளை அதிகரிப்பது, கண்காணிப்பு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்ப்பற்றபடுவதை உறுதிப்படுத்தும்.

ஏற்கெனவே நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை ராஜேஷ் பூஷன், இதுவரை நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 358 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தொற்று பாதிப்பானது 415ஆக அதிகரித்துள்ளது.

அதிகப்பட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 108 பேரும், டெல்லியில் 79 பேரும், குஜராத்தில் 43 பேரும் தெலங்கானாவில் 38 பேரும், தமிழ்நாட்டில் 34 பேரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்

Halley Karthik

தமிழ்நாட்டில் 500 கலைஞர் உணவகங்கள்; அமைச்சர் தகவல்

Saravana Kumar

நான் மர்மமான முறையில் உயிரிழந்தால்… எலான் மஸ்க்கின் ட்விட்டால் பரபரப்பு

Ezhilarasan