முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவு 20% ஆக குறைப்பு!

தமிழகத்திற்கு உரிய மண்ணெண்ணெய் அளவை 20 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது

தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கடைகளில் மாதம்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் தற்போது பெற்று வருகின்றனர். ஏற்கனவே ஒரு குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில் மத்திய அரசு மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கியதன் காரணமாக ரேஷன் கடைகளில் அளவு குறைக்கப்பட்டதாக ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் மத்திய அரசு தற்போது ஒட்டுமொத்த தமிழகத்திற்கே 20% மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக  உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படும் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது தற்போது மாநிலத்தின் மொத்த தேவையில் 20% மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவின் படி அனைத்து மாவட்டத்திற்கும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆகவே, மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து புகார்கள் பெறப்படுவது தவிர்க்கும் பொருட்டு மாவட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மண்ணெண்ணெய் பெற தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து அனைத்து நியாய விலை கடைகள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களிலும் குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement:

Related posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Saravana

நாள் ஒன்றுக்கு எத்தனை காவலர்கள் கொரோனாவால் பாதிப்பு? – காவல் ஆணையர் பதில்!

Gayathri Venkatesan

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

Saravana Kumar