கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 6,984 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 82,236 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 6,984 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,47,129 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 12,945 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,289 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 49,985 ஆக உயர்ந்துள்ளது.







