அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகள் பற்றிய
தகவல்களை அனுப்பி வைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரி 26-ல் நடைபெறும் குடியரசு தின விழாவில், டெல்லி மற்றும்
மாநில தலைநகரங்களில் முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில்
முப்படைகளின் அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு
துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறுவது வழக்கம்.
அந்த வகையில், அடுத்த ஆண்டுக்கான குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்கும்
அலங்கார ஊர்தி மாதிரிகளை வரும் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
சுதந்திரப் போராட்டம், 75 ஆண்டு சாதனைகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில்
அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ள மத்திய
அரசு, அணிவகுப்பில் இடம்பெறப் போகும் அலங்கார ஊர்திகளின் பட்டியலை தேர்வுக்
குழு இறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
நடப்பு 2022-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட பாரதியார்,
வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார் போன்றவர்களின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்தி
உரிய முறையில் வடிவமைக்கப்படவில்லை என்று கூறி மத்திய அரசு அணிவகுப்பில்
பங்கேற்க அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.