முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நடிகை மீரா மிதுன் யூ-டியூப் சேனலை முடக்க போலீசார் நடவடிக்கை

வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதால் நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க, மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூப் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர்
நடிகை மீரா மிதுன். இவர், பட்டியலின மக்கள் மற்றும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலினத்தவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் அவர் மீது புகார் அளித்திருந்தன. அதனடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜ ராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர்.

ஆனால் ஆஜராகாத மீரா மிதுன், “என்னை கைது செய்வது என்பது நடக்காது. அப்படி நடந் தால் அது கனவில்தான் நடக்கும். பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தவறானவர்கள் என்று சொல்லவில்லை. எனக்கு தொந்தரவு கொடுத்தவர்களையே தவறானவர்கள் என்று சொன்னேன்” என்று வீடியோ வெளியிட்டு கூறியிருந்தார்.

இந்நிலையில் கேரளாவில் நட்சத்திர விடுதி ஒன்றில் ஆண் நண்பர் அபிஷேக் என்பவருடன் தங்கியிருந்த அவர், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நடிகை மீரா மிதுன் சேனலை முடக்க, யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். வன்முறையை தூண்டும் வகையில் பேசி அவர் வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவினர் இந்த நடவடிக்கையை எடுத்துள் ளனர்.

Advertisement:
SHARE

Related posts

தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல் ஆணையர் எச்சரிக்கை!

Gayathri Venkatesan

10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தனியார் மெட்ரிக் பள்ளிகள் முடிவு

Saravana Kumar