முக்கியச் செய்திகள் சினிமா

திகில், மர்மம், தொல்லியல்.. ரெஜினாவின் ‘சூர்ப்பனகை’ஷூட்டிங் நிறைவு

ரெஜினா கஸண்ட்ரா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ரெஜினா, அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சூர்ப்பனகை’. ஆப்பிள் ட்ரீ ஸ்டூடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா தயாரிக்க்கும் இந்தப் படத்தை கார்த்திக் ராஜூ இயக்குகிறார். சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப்படம் உருவாகிறது. இதில் ரெஜினா, தொல்லியல் ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளார். படத்தின் பெரும்பான்மையான காட்சி கள், குற்றாலம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

படம் பற்றி, இயக்குநர் கார்த்திக் ராஜு கூறும்போது, ’சூர்ப்பனகை’ படத்தின் முழுப் படப்பிடிப் பும் முடிந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகளை நடந்து வருகின்றன. விரைவில் படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். பரபர காட்சிகள், திகில், மர்மம் மற்றும் நகைச்சுவை கூறுகள் ஆகியவற்றால் இந்தப் படம் ரசிகர்களுக்கு புது வித மான அனுபவத்தை வழங்கும் என்றார்.

Advertisement:
SHARE

Related posts

பெண்களின் துணிகளை துவைக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு, பாட்னா உயர் நீதிமன்றம் தடை

Ezhilarasan

டேங்கர் லாரி மூலம் ஆக்சிஜன் அனுப்பப்படும்: இஸ்ரோ மையம்!

Ezhilarasan

கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை: ராதாகிருஷ்ணன்