முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், அமளி காரணமாக தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்ப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர் பாலு, மழைக்கால கூட்டத்தொடரை பாதியில் முடிக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் எண்ணம் என விமர்சனம் செய்தார். தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க பல முறை எதிர்க்கட்சி எம்.பி-கள் நோட்டீஸ் கொடுத்தபோதும், அதுதொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என்றும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார். தெரிவித்ததார்.
இதைதொடர்ந்து பேசிய விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், அவையை ஒத்திவைப்பதை மட்டுமே மத்திய அரசு குறிக்கோளாக வைத்துள்ளதாக சாடினார். தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தி, உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையோடு நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Advertisement: