ஓசி பீடி தர மறுத்ததால் மயான ஊழியர் படுகொலை

பீடி கேட்டு தராததால் மயான ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் பொன்மேனி ஜெய் நகர் பகுதியில் வசித்து  வருபவர் அய்யனார் ( 60 ). இவர் மயான ஊழியராக…

பீடி கேட்டு தராததால் மயான ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் பொன்மேனி ஜெய் நகர் பகுதியில் வசித்து  வருபவர் அய்யனார் ( 60 ). இவர் மயான ஊழியராக வேலை செய்து கொண்டுவருகிறார் . நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியில் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் அய்யனாரிடம் பீடி ஒன்றை தருமாறு கேட்டுள்ளார்.ஆனால், பீடி தர மறுத்த அய்யனார் இளைஞரை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் மதுபோதையில் திடிரென அருகில் இருந்த  சுத்தியல் ஒன்றை எடுத்து அய்யனாரின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். அவர் தடுத்தும் விடாமல் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்று, தலையை சிதைத்து உயிர்போகும் வரை அடித்து கொலை செய்து தப்பியோடியுள்ளார்.

இதனைக் கண்ட அருகில் இருந்து  பொதுமக்கள் காவல் துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆராய்ந்து, அதனடிப்படையில் இளைஞரை  கைது செய்ததனர். அய்யனாரின் உடல் உடற்கூராய்விற்காக மதுரை  காவல்துறையினர் அனுப்பிவைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.