கோயில்களின் ஆகமத்தை ஆராய மீண்டும் புதிய குழு எதற்கு? – அனைத்து சாதி அர்ச்சகர் தரப்பு வழக்கறிஞர் கேள்வி

கோயில்களின் ஆகம விதிகளை ஏற்கனவே ஒரு குழுவினர் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்த நிலையில், மீண்டும் புதிய குழு எதற்கு ஆராய வேண்டும் என அர்ச்சகர் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.   தமிழ்நாடு…

கோயில்களின் ஆகம விதிகளை ஏற்கனவே ஒரு குழுவினர் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்த நிலையில், மீண்டும் புதிய குழு எதற்கு ஆராய வேண்டும் என அர்ச்சகர் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தமிழ்நாடு கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அரசின் விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அர்ச்சகர் பயிற்சி பெறும் மாணவர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரங்கநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஒரு ஆண்டு பயிற்சி பெற்றால் அர்ச்சகர் பணியை பெறலாம் என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது என்றார்.

 

பாஜக, ஆர்எஸ்எஸ், பார்ப்பன அர்ச்சகர்கள் இன்று நீதிமன்றத்தை நாடியதாக குறிப்பிட்ட அவர், அனைத்து சாதியினருக்கான அர்ச்சகர் நியமனம் செல்லும் என்று நீதிமன்றம் இன்று
கூறியுள்ளது வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

நீதிபதி உத்தரவின்படி 5 பேர் கொண்ட குழு கோயில்களின் ஆகமத்தை ஆராய உள்ளனர். ஆகம கோயில்களை ஏன் தனியாக பிரித்து, சூத்திர, பஞ்சம கோயில்கள் என பிரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், நீதிபதி மகாராஜன், ஏகே ராஜன் குழு ஏற்கனவே கோயில்களின் ஆகமம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த பிறகு புதிதாக ஏன் குழு
அமைத்து ஆகமங்களை ஆராய வேண்டும் என தெரிவித்தார்.

 

மற்ற சாதியினர் சுவாமி சிலையை தொடக்கூடாது என சிலர் செயல்படுகின்றனர் என குற்றம்சாட்டிய அவர், அறநிலையத்துறை மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் நியமனம் செய்து பெரும் சாதனை படைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.