நியூசிலாந்துக்குச் சென்ற வில்லியம்சன்- ஐதராபாத் அணிக்கு யார் கேப்டன்?

இரண்டாவது குழந்தை பிறக்கப்போவதையொட்டி, ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நியூசிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, ஐபிஎல் பாதுகாப்பு வளையத்திலிருந்து அவர் வெளியேறுகிறார். இதனால், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரால் விளையாட முடியாது.…

இரண்டாவது குழந்தை பிறக்கப்போவதையொட்டி, ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நியூசிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதையடுத்து, ஐபிஎல் பாதுகாப்பு வளையத்திலிருந்து அவர் வெளியேறுகிறார்.
இதனால், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரால் விளையாட முடியாது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐதராபாத் அணி இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி அதில் 6 இல் வெற்றியும், 7இல் தோல்வியும் அடைந்துள்ளது. மொத்தம் 12 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், ஐதராபாத் அணிக்கும் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல இன்னும் வாய்ப்புள்ளது. ஆனால், பெங்களூரு, டெல்லி அணிகள் அடுத்தடுத்த ஆட்டங்களில் தோல்வி அடைந்தால் மட்டுமே அதற்கு சாத்தியமாகும். வில்லியம்சன் அணியில் விளையாட மாட்டார் என்ற காரணத்தால், புவனேஸ்வர் குமார் அல்லது நிகோலஸ் பூரன் ஆகியோரில் ஒருவர் அணியை தலைமையேற்று நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

புவனேஸ்வர் குமார் ஏற்கனவே ஐதராபாத் அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். பூரன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.