முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்து வருகிறது- திருமாவளவன்

தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் சமீபத்தில் அதிகரித்து வருகிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தழிகத்தில் தொடரும் சாதி ஆணவ கொலைகளை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தியும், அருணபதில் நடந்த ஆணவக்படுகொலையை கண்டித்தும் விசிக சார்பில் கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், ஆணவ கொலைகள் தொடர்ந்து நடைபெறும் மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது. வன்னியர் சமூகத்தில் உட்சாதி முரண் உள்ளது. அதனால் ஜெகன் என்பவர் பொது இடத்தில் கொடூரமாக கொல்லப்பட்டார். அருணபதி கிராமத்தில் தந்தையே பெற்ற மகனையும், தனது தாயையும் வெட்டி கொலை செய்து உள்ளார்.

தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் சமீபத்தில் அதிகரித்து உள்ளது. வட மாநிலத்தில் தான் இது போல் நிகழும். தமிழகத்தில் அவ்வப்போது நடந்து இருந்தாலும் கிருஷ்ணகிரியில் அண்மை காலமாக நடைபெற்று வருவது அதிர்ச்சி அளிக்கிறது. ஆணவ கொலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பொருட்டாக கருதுவது இல்லை.

இட ஒதுக்கீடு மற்றும் நீர் நிலைகளில் குடியேறுபவர்களை அகற்றுவது போன்ற விஷயங்களில் நீதிமன்ற உத்தரவை அரசு காரணம் காட்டுகின்றது. ஆனால் ஆணவ கொலைக்கு நீதிமன்ற வழிகாட்டுதலை மத்திய, மாநில அரசுகள் முறையாக கடைபிடிப்பது இல்லை. ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 12 மணி நேர வேலை மசோதா நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தோழமை கட்சிகளின் எதிர்ப்பை மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதா தொழிலாளர் சமூகத்திற்கு எதிரானது. திமுகவின் நம்பகதன்மையை இந்த மசோதா கேள்விகுறியாக்கும். இந்த மசோதவை திரும்ப பெற விசிக வலியுறுத்தி வருகிறது. தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற முதல்வரை நேரில் சந்தித்து விசிக வலியுறுத்தும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி – வி.கே.சசிகலா

Web Editor

3 நாட்கள் வீட்டில் கட்டாயமாக தேசியக் கொடி ஏற்ற வேண்டும்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

Web Editor

வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

Halley Karthik