முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

உஸ்பெகிஸ்தான் : இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழப்பு

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மற்றும் சளி மருந்தை உட்கொண்ட சுமார் 70 குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன் தொடர்ச்சியாக தற்போது உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த மாரியன் பயோடெக் என்ற தனியார் மருந்து நிறுவனத்தின் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடுமையான காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள் DOK -1 MAX என்ற மருந்தை உட்கொண்டதும் உயிரிழந்துவிட்டதாக உஸ்பெகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் அதில் உடலுக்கு கேடு செய்யும் ரசாயனங்கள் கலந்திருந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொழிலாளர்களுக்கு இருக்கை வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் கணேசன்

Web Editor

ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன் 

G SaravanaKumar

போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை : மாநகராட்சி ஆணையர்!

EZHILARASAN D