சுவாமி விவேகானந்தரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், கூறப்பட்டுள்ளதாவது:
சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
சிறந்த தேசபக்தரும், தத்துவஞானியும், ஆன்மீகப் பார்வையாளருமான சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் நாகரிக உணர்வை மீண்டும் தட்டியெழுப்பியதுடன், நமது மண்ணின் காலத்தால் அழியாத ஞானத்தை உலகிற்கு எடுத்துச் சென்றார்.
நம்பிக்கை, அறிவுத்தெளிவு மற்றும் கருணை கொண்ட இந்தியாவைக் குறித்த அவரது தொலைநோக்குப் பார்வை, நமது தேசத்தின் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டியாகத் திகழ்கிறது. அர்ப்பணிப்புடன் பணியாற்றவும், உயர்ந்த நற்பண்புகளைக் கடைப்பிடிக்கவும், தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் உறுதியுடன் நிலைத்திருக்கவும் அவரது கொள்கைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




