புறா மீது எல்லை பாதுகாப்புப் படையினர் புகார் பதிவு செய்துள்ள சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது.
பஞ்சாபின், அம்ரிஸ்டரில் உள்ள ரோவாலா சோதனைச்சாவடியில், கடந்த சனிக்கிழமை, புறா ஒன்று பறந்துவந்துள்ளது. அப்போது பணியிலிருந்த பாதுகாப்பு படை வீரரின் தோளில் அது அமர்ந்தது. அந்த புறாவின் கழுத்தில், தொடர்புகொள்ள எண்கள் கொண்ட ஒரு குறிப்புச் சீட்டும் இருந்தது.
அந்தப் புறா பாகிஸ்தானிலிருந்து வந்ததாகவும், புறா அனுப்பப்பட்டதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்றும் எல்லை பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர். பொதுவாகத் தீவிரவாதிகள் தங்கள் ரகசியங்களை பரிமாறிக்கொள்ள இதுபோன்று புறாவைத் தூது அனுப்புவது எப்போதும் நிகழும் சம்பவம்தான்.
ஆனால் அதுபோலவே புறாவின் உரிமையாளர்கள்கூட இப்படி ஒரு குறிப்பை எழுதி அனுப்பியிருக்கலாம். மேலும் அந்த புறா எந்த காரணத்திற்காகவும் அனுப்பப்படாமலும் இருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.







