குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார்.
ஏப்ரல் 19ஆம் தேதி குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்துவருகிறார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். அப்போது, வாக்கு எண்ணிக்கை நாளன்று கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய அரசியல் நிகழ்வுகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.







