வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான அசுரன் படம் வசூல்ரீதியாக நல்ல வெற்றி பெற்றதுடன் தேசிய விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் சூரி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் first look போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “
என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏர்படுத்திக்கொடுத்த இயக்குநர் வெற்றிமாறனுக்கும், இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். புதிய பரிமாணத்தில் விஜய்சேதுபதியுடன் இணையவதில் மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.







