சென்னையில் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்!

சென்னையில் நடுரோட்டில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் சென்னை நோக்கி சொகுசு காரில் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தார். கார் சென்னை…

சென்னையில் நடுரோட்டில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் சென்னை நோக்கி சொகுசு காரில் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தார். கார் சென்னை மீனம்பாக்கத்தை கடந்து கிண்டி சிக்னல் அருகே வந்து கொண்டிருக்கும் போது காரில் இருந்து புகை வந்துள்ளது, அதனை கண்ட கார்த்தி வேறொரு காரில் தான் புகை வந்துள்ளது என நினைத்துக் கொண்டு தொடர்ந்து காரை ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் காரின் முன்பகுதியிலிருந்து அதிகமாக புகை வருவதை கண்ட கார்த்தி அதிர்ச்சி அடைந்து ஆலந்தூர் அருகே காரை நிறுத்தி பார்த்த போது தன்னுடைய காரில் இருந்து தான் புகை வந்துள்ளது என அறிந்து கொண்ட கார்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினர் உடனே காரில் இருந்து இறங்கி காரில் உள்ள பொருட்களை எடுப்பதற்குள் தீ முற்றிலும் பரவி கார் முழுவதும் தீக்கிரையானது.

இதனை கண்ட அப்பகுதிமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

– அறிவுச்செல்வன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.