உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் கோயிலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஒரே காரில் 15 பேர் பயணம் செய்த நிலையில் சாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பி உள்ளனர்.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த கால்வாயில் தலை குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த 4 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







