கடலூர் அருகே டிப்பர் லாரியின் பின்புறம் கார் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார், முன்னால் சென்ற டிப்பர் லாரியில் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பேரில், சென்னையைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் ஐசக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் கர்ணன் மற்றும் கிரி ஆகியோர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கர்ணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் விபத்துகள் நடைபெற்று பலர் உயிரிழப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.