பழுந்தடைந்த காரை சரி செய்து தராததால், காருக்கான தொகை ரூ. 7.23 லட்சம்,
இழப்பீடு ரூ. 2 லட்சம் வழங்க வால்ஸ் வோகன் கார் நிறுவத்திற்கு திருவாரூர்
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பு. தனியார் நிறுவனத்தில்
பொது மேலாளராக பணியாற்றி வரும் இவர், சென்னை வொயிட்ஸ் சாலையில் உள்ள
வால்ஸ்வோகன் கார் விற்பனை நிலையத்தில் கார் ஒன்றை கடந்த 2011 ஆம் ஆண்டு
வாங்கியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆரம்பத்தில் நன்றாக இயங்கி கார், முதல் சர்வீஸுக்கு பிறகு சரியாக இயங்கவில்லை.
இது குறித்து கடந்த 2013 ஜனவரியில் சுப்பு புகார் தெரிவித்துள்ளார். காரை சரிசெய்து தருவதாக வால்ஸ் வோகன் நிறுவனம் கூறியது. ஆனால், உதிரிபாகங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி சுப்பு 6 மாதகாலம் அலைக்கழிப்பட்டுள்ளார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆனான சுப்பு, சென்னையில் உள்ள நுகர்வோர் குறைதீர்
ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையும் படிக்க: கேரள முதல்வரின் செயலாளரிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை!
இந்த வழக்கின் இறுதி விசாரணை திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி, மனுதாரர் சுப்பு, வால்ஸ் வோகன் நிறுவனத்தின் காரை வாங்கியுள்ளார். அவர் காரில் ஏற்பட்ட பழுதை உரிய காலத்திலும், உரிய முறையிலும் சரி செய்து வழங்கப்படவில்லை.
எனவே, வால்ஸ் வோகன் நிறுவனம், பழுதான காருக்கான தொகை ரூ. 7.23 லட்சம், மனஅழுத்தத்தை ஏற்படுத்தியதற்காக ரூ. 2 லட்சம், வழக்கு செலவுத் தொகை ரூ. 30 ஆயிரம் என மொத்தம் ரூ. 9.53 லட்சத்தை சுப்புவிற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
-ம.பவித்ரா