கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது.
கோயமுத்தூர் சாய்பாபா காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அவர் தனது காரில் ஒசூர் சென்று விட்டு, தருமபுரி வழியாக மீண்டும் கோயமுத்தூர் திரும்பிக் கொண்டிருந்தார்.
தருமபுரி மாவட்டத்தில் பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் அருகே கார் வந்து கொண்டிருந்த போது காரிலிருந்து திடீரென புகை வரத் தொடங்கியது. விரைந்து செயல்பட்ட பாலசுப்பிரமணியன், காரை சாலையோரம் நிறுத்தி விட்டு, இறங்கி பத்திரமாக வெளியே வந்தார்.
அவர் இறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே கார் முழுவதுமாக எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள், கார் முழுமையாக எரிந்து எலும்புக் கூடாக மாறியது.
—சௌம்யா.மோ






