எங்கள் அணிக்கு கேப்டனாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உள்ளார் என சட்டப் பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தை காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாயார் துர்கா ஸ்டாலின், மனைவி கிருத்திகா மற்றும் மகள் தன்மயா ஆகியோர் சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
”வரலாற்றில் வடக்கிலிருந்து இங்கு வந்து எப்போதும் யாரும் வெற்றி பெற்றது கிடையாது. அதேபோல தற்போது வடக்கிலிருந்து இங்கு வந்து வெற்றி பெறலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. அவர்களது விளையாட்டு தமிழ்நாட்டில் எப்போதும் எடுபடாது.
எங்கள் அணிக்கு கேப்டனாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உள்ளார். எப்போது அடித்து ஆட வேண்டும், எப்போது முன்னேறி சிக்சர் அடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவர் எங்கள் தலைவர் கலைஞர்.
ஆன்லைன் சூதாட்ட தடுப்பு மசோதா மற்றும் டெல்டா நிலகரி சுரங்கம் தடுப்பு என தொடர்ந்து 2 சிக்ஸர்களை அடித்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என அமைச்சர் உதயநிதி பேசினார்.