IPL டிக்கெட் கேட்ட எஸ்.பி. வேலுமணி; எங்கு கேட்டால் எளிதில் கிடைக்கும் என யோசனை தெரிவித்த அமைச்சர் உதயநிதி

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், ஐபிஎல் டிக்கெட் கேட்ட அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணிக்கு டிக்கட் எங்குக் கேட்டாள் எளிதில் கிடைக்கும் என யோசனை தெரிவித்த உதயநிதி ஸ்டாலின். 16வது ஐபில் போட்டிகள் கடந்த…

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், ஐபிஎல் டிக்கெட் கேட்ட அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணிக்கு டிக்கட் எங்குக் கேட்டாள் எளிதில் கிடைக்கும் என யோசனை தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்.

16வது ஐபில் போட்டிகள் கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சில போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த சூழலில் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் ரசிகர்களுக்கு கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆன்லைன் டிக்கெட்டுகள் சிறிது நேரத்திலே விற்று தீர்ந்த நிலையில், 750 ரூபாய் கொண்ட டிக்கெட்டை சமூக வலைதளம் மூலமாக ரூ.5000-க்கும் அதற்கு மேலும் விற்கப்படுகின்றன. சில நேரங்களில் ரூ.6000 வரையிலும் விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

டிக்கெட் வாங்க விரும்புபவர்கள் இரவு முழுவதும் காத்திருந்தாலும் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுவதாக தெரிகிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். டிக்கெட் கிடைக்காத விரக்தியால் பல கருத்துகளை ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில்,  சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை மீதான மானியக் கோரிக்கையின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியின் போது சென்னையில் ஐ பி எல் போட்டிகள் நடைபெறும் போது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது என அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி

மேலும், தற்போது திமுக ஆட்சியிலும் 400 பாஸ் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் எங்கள் யாருக்கும் வழங்கவில்லை. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாஸ் வழங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி ஐபிஎல் டிக்கெட் கேட்டதற்குப் பதிலளித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் கேட்டிருந்தார். 4 ஆண்டுகளாகச் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது இல்லை. இப்போதுதான் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டிகளே நடைபெறாத நிலையில் இவர் யாருக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தார் என்பது தெரியவில்லை.

https://twitter.com/Shilpa1308/status/1645748218175827968?s=20

நான் ஒவ்வொரு மேட்சுக்கும் என்னுடைய சொந்த பணத்திலிருந்து 150 பேரை என்னுடைய தொகுதியிலிருந்து அழைத்துச் சென்று வருகிறேன். ஐபிஎல் போட்டியை நடத்துவது பிசிசிஐ. அது யாரென்றால், உங்களின் நெருங்கிய நண்பரான அமித்ஷாவின் பையன் ஜெய்ஷாதான் தலைவர். நாங்கள் சொன்னால் அவர் கேட்க மாட்டார்.

நீங்கள் அவரிடம் பேசி அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 5 டிக்கெட் வாங்கிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். நாங்கள் காசு கொடுத்துக் கூட வாங்கிக் கொள்கிறோம். இல்லை என்றால் நீங்கள் வேறு ஏதாவது கணக்கில் சேர்த்துவிடுவீர்கள் என அவருக்குப் பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.