“கேப்டன் மில்லர்” டீசர் எப்போது? இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும்  ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டீசர் நடிகர் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ம் தேதி வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக…

நடிகர் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும்  ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டீசர் நடிகர் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ம் தேதி வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் தனுஷ் பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் மூலம் ரசிகர்களை குஷிபடுத்தி உள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் தாங்கல் மண்டலத்தில் நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

தற்போது இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தென்காசி அருகே உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘கேப்டன் மில்லர்’  படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. அதன்படி ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இந்த மாத இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.