கேரளா மலப்புரம் அருகே லாட்ஜ்-ல் ஏற்பட்ட தீ விபத்தில் கடை மற்றும் இருசக்கர வாகனம் தீயில் எரிந்து நாசமடைந்தன.
கேரளா மலப்புரம் அருகே புத்தந்தானி பகுதியிலுள்ள தனியார் லாட்ஜில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாட்ஜின் கீழ் பகுதியிலுள்ள பெயிண்ட் கடை மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனமும் தீயில் எரிந்தது.
முன்னதாக கடையிலிருந்து புகை வெளியறியதை பார்த்து பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் தீயணைப்பு துறை வீரர்களை வரவழைக்கப்பட்டனர். பின் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.