கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? 

ஜனவரி 3-ம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.  சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்…

ஜனவரி 3-ம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.  சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.  முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தனர்.

இதையும் படியுங்கள்: சென்னையில் இன்று முதல் 21-வது சர்வதேச திரைப்பட விழா!

அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்தது.  இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  விரைவில் இதன் டிரைலர் வெளியாக உள்ளது.

இந்நிலையில், கேப்டன் மில்லரின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாகவும் நிகழ்வை ஜனவரி 3-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.