“பெட்ரோல் விக்குற விலைக்கு இதான் ஒரே வழி! -வைரலாகும் Bull Rider வீடியோ!

தலைநகர் டெல்லியின் தெருக்களில் முயல் ஹெல்மெட் அணிந்த ஒருவர் எருமை மீது சவாரி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விண்ணைத் தொட்டு வருவதால், பொதுமக்கள் மிகுந்த…

தலைநகர் டெல்லியின் தெருக்களில் முயல் ஹெல்மெட் அணிந்த ஒருவர் எருமை மீது சவாரி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விண்ணைத் தொட்டு வருவதால், பொதுமக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.  அதிகரித்து வரும் எண்ணெய் விலைகளால், பெரும்பாலான மக்கள் தங்கள் கார்கள் மற்றும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து,  பொதுப் போக்குவரத்தைத் தேர்வு செய்கிறார்கள்.

இந்நிலையில் இங்கு ஒருவர் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை சமாளிக்க வாகனத்திற்கு பதிலாக எருமை மாட்டை பயன்படுத்தி வருகிறார்.

அப்படியொரு அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அதில் முயல் வடிவ ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவர் தலைநகர் டெல்லியின் தெருக்களில் எருமை மீது சவாரி செய்வது வருகிறார்.  டெல்லியைச் சேர்ந்த இவர் எருமை மாடு ஓட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.