சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (02-11-26) மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் (“முரசு”) (severe cyclonic storm) வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (03.11.2026) அதிகாலை 03.30 மணி முதல் காலை 05.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நெல்லூருக்கும் நர்சாப்பூருக்கும் இடையே ஒங்கோலுக்கு மிக அருகில் கரையை கடந்தது. இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மதியத்திற்குள் வலுவிழந்து புயலாகவும் (cyclonic storm) மேலும் இன்று நள்ளிரவுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression) வலுவிழக்கக்கூடும்.
சுமார் 0.9 கிமீ உயரத்தில் தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரம் வரை லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் கடலோர கர்நாடக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




