‘கேப்டன் மில்லர்’ படக்குழு, களக்காடு வனப்பகுதியில் விதிகளை மீறி படப்பிடிப்பு நடத்தியது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் குழுவினர் விதிகளை மீறி களக்காடு வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்த நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, படப்பிடிப்புக்கு மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படக்குழு விதிகளை மீறி படப்பிடிப்பு நடத்தியது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது. படக்குழு விதிகளை மீறுவதாக பிப்ரவரி மாதமே ராம உதயசூரியன் என்ற விவசாயி புகார் அளித்துள்ளார்.
15 ஊர்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கால்வாய் கரைகளை சேதப்படுத்தி, மரப்பாலத்தை அமைத்ததாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மரப்பாலத்தை அகற்றும்படி சிச்சாறு வடிநில உதவி பொறியாளர் பிப்ரவரி மாதமே உத்தரவிட்டுள்ளார். ஆனால், உத்தரவை மீறி படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல்கள் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.







