“கேப்டன்…. கேப்டன்….” – தீவுத் திடலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும் விஜயகாந்த் உடலை பார்த்து கதறி அழும் தொண்டர்கள்..!

சென்னை தீவுத் திடலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும் கேப்டன் விஜயகாந்த் உடலை பார்த்து “கேப்டன்…. கேப்டன்….”  என கதறி அழுதவாறு தொண்டர்கள் ஊர்வலமாக பின் தொடர்கின்றனர்.   விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும்,  சுவாசிப்பதில் சிக்கல்…

சென்னை தீவுத் திடலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும் கேப்டன் விஜயகாந்த் உடலை பார்த்து “கேப்டன்…. கேப்டன்….”  என கதறி அழுதவாறு தொண்டர்கள் ஊர்வலமாக பின் தொடர்கின்றனர்.  

விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும்,  சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் நேற்று காலை அறிவித்திருந்தது.  அதனை தொடர்ந்து காலை 9:30 மணி அளவில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி,  அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும்,  2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை  அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  இந்த நிலையில் விஜயகாந்த் உடல் இன்று பொதுமக்களின் பார்வைக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை 4மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக கொண்டு வருகின்றனர்.

ஊர்வலமாக கொண்டு வரப்படும் விஜயகாந்த் உடலை பார்த்து “கேப்டன் .. கேப்டன்” என கதறிய அழுதவாறு பொதுமக்களும் , தொண்டர்களும் அவரை பின் தொடர்கின்றனர். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு  இன்று மாலை 4:45மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.