புற்றுநோய் தினம்: அடையாறு புற்றுநோய் மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி!

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, அடையாறு புற்றுநோய் மையத்தின் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ம் தேதி புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் சார்பில்…

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, அடையாறு புற்றுநோய் மையத்தின் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ம் தேதி புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி இயக்குநர் விஜயகுமாரி தலைமையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். மேலும் புற்றுநோயை தடுப்பது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் விஜயகுமாரி, புற்றுநோய்க்கு சிறந்த மருத்துவராக திகழ்ந்த டாக்டர் சாந்தாவின் மறைவு வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். பின்னர் அவருடைய மருத்துவத்தை கற்றுக்கொண்டு புற்றுநோய் நோயாளிகளை காப்பாற்றுவதற்கு முயல்வோம் என்று கூறினார்.

மேலும் பேசிய விஜயகுமாரி, உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் இந்தப் பேரணியை பொது மக்கள் விழிப்புணர்வாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply