புற்றுநோய் மற்றும் போலியோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான விழிப்புணர்வு கார் பயணத்தை
இன்று குமரிமுனையில் நான்கு பெண்கள் கொண்ட குழு துவங்கினர்.
உலக நாடுகளில் புற்றுநோய் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஆண்டு தோறும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கான தீர்வுக்கு மருத்துவத்துறையும் பல ஆய்வுகளையும் செய்து வருகிறது.
இந்நிலையில் புற்று நோய் குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், போலியோ , குழந்தைகள் நலம் , மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், குமரி முதல் காஷ்மீர் வரையிலான விழிப்புணர்வு கார் பயணத்தை நான்கு பெண்கள் இன்று குமரிமுனையில்
துவங்கினார்கள்.
சென்னையை சேர்ந்த விரியும் சிறகுகள் என்ற ரோட்டரி சங்கம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பயணம் 31 நகரங்கள் வழியாக 15 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்த பயணத்தின் போது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடையே கொண்டு சேர்க்க உள்ளதாக விழிப்ணர்வு பயணம் மேற்கொண்டவர்கள் தெரிவித்தார்கள்.







