ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கி

குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 50 புள்ளிகள் உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெறும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.4…

குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 50 புள்ளிகள் உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெறும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.4 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது. இதையடுத்து, ரெப்போ விகிதம் 5.90% ஆக அதிகரித்துள்ளது.

நடப்பு ஆண்டில் வட்டி விகிதத்தை 4வது முறையாக உயர்த்தி அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயரக் கூடும். தனிநபர் கடனுக்கான தவணைத் தொகையும் அதிகரிக்கும்.
கடந்த மே மாதம் முதல் தற்போது வரை ரெப்போ வட்டி விகிதம் 1.4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “கொரோனா மற்றும் உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.