பள்ளிக்கூடங்களில் விளையாட்டு மைதானம் இல்லாவிட்டால் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவைத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத உள்ளதாகக் காரைக்குடியில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மினி மராத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பேசுகையில், விளையாட்டு வீரர்கள் வாடிக்கையாக உடற்பயிற்சி செய்வதற்குத் தேவையான வசதிகள் நமது கல்வி அமைப்பில் இடமில்லை என்றும் எக்ஸாம், ஹோம் ஒர்க், டியூசன் இந்த மூன்றும் இருக்கும் வரைக்கும் தன்னை பொறுத்தவரை விளையாட்டுத்துறைக்கும் மற்ற பொழுது போக்கிற்கும் பெரிதாக வரவேற்பு இருக்காது எனக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்; தலைவர்கள் வாழ்த்து!’
தொடர்ந்து பேசிய அவர், இதை மேம்படுத்த வேண்டும் என்றால் கட்டாய பாடமாக உடற்பயிற்சி கல்வியைக் கொண்டு வர வேண்டும் என்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்றால் ஒரு மைல் தூரத்தை ஆறு நிமிடத்தில் கடக்க வேண்டும். அப்படிக் கடக்கவில்லை என்றால் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேச உள்ளதாகக் கூறினார். மேலும், வகுப்பறையில் லேட்டாக வரும் மாணவர்களைப் பிடிப்பதற்காகத்தான் உடற்கல்வி ஆசிரியர்களைப் பள்ளியில் வைத்துள்ளதாகச் சாடினார்.
மேலும், பள்ளிக்கூடங்களில் விளையாட்டு மைதானம் இல்லாவிட்டால் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவைத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத உள்ளதாகக் காரைக்குடியில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி தெரிவித்தார்.