மகாராஷ்டிரா சிவசேனாவில் தாம் தற்போது ஏற்படுத்தியிக்கும் கலகத்தை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தியிருக்க வேண்டும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா சிவசேனாவில் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக சமீபத்தில் போர்க்கொடி தூக்கிய ஏக்நாத் ஷிண்டே, பின்னர் 40க்கும் மேற்பட்ட எற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏக்கள் உதவியுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தார். 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை வைத்திருந்தாலும், முதலமைச்சர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவிற்கு விட்டுக்கொடுத்தது பாஜக.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தானோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவை கலைத்தாலும் கலைப்பேனே தவிர, காங்கிரசுடனோ, தேசியவாத காங்கிரசுடனோ கூட்டணி அமைக்கமாட்டேன் என சிவசேனா நிறுவனர் பாலதாக்ரே கூறியதை சுட்டிக்காட்டினார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியுடன் உத்தவ் தாக்ரே கூட்டணி அமைத்தபோதே கலத்தை ஏற்படுத்தி அந்த கூட்டணி ஆட்சி அமைவதை தடுக்காமல் விட்டுவிட்டோமே என தான் அவ்வப்போது வருத்தப்படுவதாகவும் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
சிவசேனாவிற்கு தாங்கள் துரோகம் இழைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதிக்கத்தால் சிவசேனா அழிவதைத்தான் தாம் தடுத்துள்ளதாகவும் கூறினார்.