ஆன்லைன் மற்றும் சைபர் க்ரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்கள் இழந்த பணம் திரும்பக் கிடைக்குமா? அதைப் பெற்று தர வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கு? இதை பற்றி சைபர் கிரைம் நிபுணர் மனோஜ் நியூஸ் 7 தமிழுக்கு விரிவான நேர்காணல் அளித்துள்ளார். கேள்வி – பதில் வடிவில் அதனை காண்போம்.
சைபர் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரிடம் எப்படி புகார் தெரிவிக்க வேண்டும் ?
சைபர் க்ரைம்னால பாதிக்கப்பட்டவங்க எந்த வங்கிக் கணக்கிலிருந்து பணம் காணாமல் போனதோ அதே வங்கியில் புகார் தெரிவிக்கலாம். இல்லையெனில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். சரியான தீர்வு கிடைக்கவில்லை எனில் சைபர் க்ரைம் குற்றங்களுக்கான இணையத்தில் புகார் தெரிவிக்கலாம்.
சைபர் க்ரைம் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவங்க இழந்த பணம் திரும்ப கிடைக்குமா? யார் மூலம் எப்படி கிடைக்கும்? அதற்கு யார் பொறுப்பு?
சைபர் க்ரைம் சட்டத்தின் படி வங்கி அல்லது தனியார் நிறுவனம் மூலம் சைபர் க்ரைம் நடந்திருந்தால் அதற்கு அந்த நிறுவனங்களே முழு பொறுப்பு ஏற்கும். தனி நபரின் அலட்சியத்தால் பணம் இழக்க நேரிடும் போது குற்றவாளி மாட்டினால் மட்டுமே பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புகள் இருக்கு.
சைபர் க்ரைம் சட்டம் என்ன சொல்லுது? தண்டனை குறைவாக இருப்பதனால் தான் குற்றங்கள் அதிகம் நடக்கிறதா?
சைபர் க்ரைம் சட்டம் இருப்பது மிகவும் சிறந்தது. இருப்பினும் தண்டனைகள் அதிகமா இருந்தால் மட்டுமே சைபர் க்ரைம் குற்றங்களை குறைக்கலாம்.
பொதுமக்கள் சைபர் க்ரைம் குற்றங்களினால் பாதிக்கப்படுற செய்தி நிறைய பார்த்திருப்போம். ஆனால் காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளின் புகைப்படங்களை வைத்து பெரிய மோசடி நடக்கிறது. இதை எப்படி பார்ப்பது?செல்போன் பயன்படுத்துற எல்லாருக்குமே இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. free wifi, auto update மற்றும் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்க் ஒபன் செய்வதனால் செல்போன்ல இருக்க டேட்டா லீக் ஆகுறதுக்கு வாய்ப்புகள் நெறைய இருக்கு. பாதுகாப்பாக செல்போன் பயன்படுத்துவதன் மூலம் இது மாதிரியான குற்றங்கள் நடப்பதை குறைக்கலாம்.
சைபர் க்ரைம் குற்றங்கள் நடக்கும்போது புகார் தெரிவிக்க மக்கள் முன் வருவதில்லை. இதன் காரணம் என்ன?
ஒருவருக்கு பணம் செலுத்தும் போது சரியான வங்கி கணக்குதானா என சரி பார்த்து செலுத்தாததால் சில தவறுகள் நடக்கிறது. அந்த மாதிரி தனி நபரின் அலட்சியத்தால் நடக்கும் குற்றங்களால் புகார் தெரிவிப்பதில்லை.







