பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? என்பது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்தார்.
விருதுநகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.ஸ்.அழகிரி காங்கிரஸ் கட்சியில் குறை இருப்பது என்பது உண்மையாக கூட இருக்கலாம். ஒரு அமைப்பு என்பது குறையின்றி இருக்க முடியாது என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது அதன் பலன்களை அனுப்பி விட்டு தற்போது காங்கிரஸ் கட்சியில் அனுபவிக்க ஒன்றும் இல்லாததால் அவர் கட்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்.
கட்சியுடன் அவருக்கு கருத்து வேறுபாடு இருந்தால் அமைதியாக விலகிக் கொள்ள வேண்டும் அல்லது அதனை ஏற்றுக் கொண்டு கட்சியில் இருந்து கொண்டே அதனை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவதை விட உளரல் தான் அதிகமாக உள்ளது. எனவே மிகச் சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்பதற்காக ஆளுநர் ரவி செயல்படுகிறார்.
ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் பேச்சாளர் (ஸ்போக் பெர்சன்) போல் செயல்படுகிறார்.
மேலும் திருக்குறளை மொழிபெயர்த்தவர்கள் அதில் இருந்த ஆன்மீகத்தை எடுத்துவிட்டு வேண்டுமென்றே திருக்குறளை வேறுவிதமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் என்று தமிழ் மொழியே தெரியாத ஆளுநர் பேசியிருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டை பாஜகவின் பேச்சாளர் சொல்லியிருந்தால் அது வேறுவிதமாக இருக்கும். ஆனால் அதிகாரம் மையத்தில் இருப்பவர் பேசி இருக்கிறார் என்றால் அந்த பொய்யை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.
இலக்கியங்கள் அனைத்தும் ஏதாவது ஒன்றை மையப்படுத்தி பேசுவார்கள். ஆனால் திருக்குறள் மட்டும் தான் இதை எதையுமே மையப்படுத்தாமல் மனிதநேயத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட நூல். திருக்குறள் மட்டும்தான் ஒரு தமிழர் தமிழில் எழுதி அதில் ஒரு இடத்தில் கூட தமிழ் குறித்து பயன்படுத்தவில்லை.
ஜி.யு.போப் என்ற கிறிஸ்தவர் மொழிபெயர்த்தார் என்பதால் பாஜகவினர் திருக்குறளை ஒரு சமய நூலாக கருதுகிறார்கள். திருக்குறள் ஒரு சமய நூல் அல்ல.
மேலும் திருவள்ளுவர் சிலை மீது காவியை அடித்து திருவள்ளுவரை சமய துறவியாக ஆக்க பாஜகவினர் முயற்சித்தார்கள்.
பரந்தூரில் விமான நிலையம் அமைய வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சி நிலைப்பாடு. மேலும் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் ஒரு நிலத்தில் மீது தான் அமைக்கப்படும். ஆனால் நிலம் கொடுத்தவர்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
தற்போது தமிழக அரசு மூன்று புள்ளி 50 சதவீதம் இழப்பீடு தருவதாக அரசு அறிவித்திருக்கிறது. அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற போவதில்லை. எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும். பாஜக மக்களை ஜாதியின் பெயரால் மொழியின் பெயரால் மதத்தின் பெயரால் பிரிப்பதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அதனால் தான் தமிழகத்தில் பாஜக வளரவில்லை என்றார் கே.எஸ்.அழகிரி.








