கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரம் – பொதுமக்கள் அச்சம்..!

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த…

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் புதிதாக 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்து வருகிறது.

இதையும் படியுங்கள் : காஸாவில் போர் நிறுத்தம் கொண்டுவர ஐ.நா.வில் தீர்மானம் – ஆதரவாக வாக்களித்தது இந்தியா..!

“சுவாச கோளாறுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் கொரோனா தொற்று கண்டறியப்படுகின்றன. பெரும்பாலான பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை. மாறாக கோவிட் தொற்றே உறுதிசெய்யப்படுகின்றது. வளிமண்டல மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்தால், கொரோனா தொற்றின் அறிகுறிகள் தீவிரமடைந்து வருவதைக் காண முடிகிறது” என்று அம்மாநில மருத்துவர் சன்னி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.