பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த இயலுமா- தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

பொங்கல் பரிசு தொகையை ரேசன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த இயலுமா என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பிற்கான பொருட்களை தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய…

பொங்கல் பரிசு தொகையை ரேசன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த இயலுமா என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பிற்கான பொருட்களை தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், பொங்கல் பரிசுத் தொகையை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மினிமம் பேலன்ஸ் எனக்கூறி வங்கிகள் பணத்தை எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளதால் திட்டத்தின் பலன் மக்களுக்கு முழுமையாக கிடைக்காமல் போகக்கூடும் எனக் கூறினார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணியை போல், இதனையும் செய்யலாமே எனத் தெரிவித்தனர். மேலும், பரிசு தொகையை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த இயலுமா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.