தமிழ்நாடு முழுவதும் மழையின் காரணமாக சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக கனமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பாக வைக்காததால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








