‘அம்பேத்கரின் சித்தாந்தத்தை பாஜகதான் முழுமையாக செயல்படுத்தி வருகிறது’

அம்பேத்கரின் சித்தாந்தத்தை பாஜகதான் முழுமையாக செயல்படுத்தி வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில், ‘மாற்றத்தை விதைத்தவன் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா’ எனும்…

அம்பேத்கரின் சித்தாந்தத்தை பாஜகதான் முழுமையாக செயல்படுத்தி வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில், ‘மாற்றத்தை விதைத்தவன் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா’ எனும் நூலை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மக்களின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பதை மறந்துவிட்டதாக தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு மட்டும் முதலமைச்சர் அல்ல என்றும், அவர் ஆளுநரின் தேனீர் விருந்துக்கு சென்றிருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.

அண்மைச் செய்தி: ராஜ்பவனில் பாரதியார் சிலையை திறந்து வைத்தார் தமிழ்நாடு ஆளுநர்

அம்பேத்கரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதே பாஜகவின் நோக்கம் என்று தெரிவித்த அண்ணாமலை, அம்பேத்கரின் சித்தாந்ததை பாஜகதான் முழுமையாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.