முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து பல முறை…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சி பொறுப்பற்ற பிறகு அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, 2 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்டது. ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அமைச்சரவையில் புதிய அமைச்சருக்கு இடம் அளிக்கப்பட்டது.

அதன்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டப்படும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு கூட்டப்படும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஜனவரியில் ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த மாதம் சட்டசபை கூட்டத்தொடர் 9-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். ஆளுநர் ஆற்றும் உரையில் இடம் பெறும் கருத்துகள், திட்டங்கள் போன்றவை இந்த அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட உள்ளது. அதுபற்றி அமைச்சரவை ஆலோசித்து அங்கீகாரத்தை வழங்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.