டிச.19ம் தேதி அமைச்சரவை கூட்டம் – பொங்கல் பரிசு, புதிய திட்டங்கள் குறித்த ஆலோசனைக்கு வாய்ப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக சேர்ந்துள்ள நிலையில், பத்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக சேர்ந்துள்ள நிலையில், பத்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவையின் 10-வது கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இதில் பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டுக்கான முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரியில் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், அதில் இடம்பெறவுள்ள திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.