மேட்டுப்பாளையத்தில் திருமண பத்திரிகையை தக்காளியுடன் தாம்பூலத் தட்டில் வைத்து நண்பர்களை திருமணத்திற்கு அழைத்துள்ள சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் தக்காளி, காய்கறிகளை வைத்து வித்தியாசமான முறையில்
நண்பர்கள் மற்றும் உறவினர்களை திருமணத்திற்கு அழைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ள நிலையில் தக்காளி வைத்து புதிது புதிதாக தினம் தினம் ஏதோ ஒன்றைச் செய்து மக்களின் கவனத்தை சிலர் ஈர்த்து வருகின்றனர். தற்போது வைரலாக வேண்டும் என்பதற்காகவே திருமண நிகழ்வுகளில் விதவிதமான சம்பவங்களை நிகழ்த்தி அதனை டிரண்டாக்குது தற்போது வாடிக்கையாக உள்ளது.
அந்த வகையில் திருமண அழைப்பதல் வழங்கும் தாம்பூலத் தட்டில் விலை அதிகமாக உள்ள காய்கறிகளான தக்காளி உள்ளிட்ட பொருட்களை வைத்து நண்பர்களை திருமணத்திற்கு ஒருவர் அழைத்துள்ளார்.
மேட்டுப்பாளையம் உழைப்பாளர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர் குணசுந்தரி. இவர் தனது மகளின் திருமணத்தின் அழைப்பிதழை வழங்கும்போது தற்போது அதிக விலையாக உள்ள தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு போன்ற பொருட்களுடன் தாம்பூல தட்டில் வைத்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கி வருகிறார்.
மேட்டுப்பாளையம் அண்ணாஜீராவ் சாலையில் தனது மார்க்கெட் நண்பர்களை
திருமணத்திற்கு அழைக்க தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுடன் திருமணத்திற்கு அழைப்பு விடுத்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
திருமண தாம்பூல தட்டில் பழ வகைகளான ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம்
போன்றவற்றை வைத்து திருமணத்திற்கு அழைக்கும் முறை மாறி தற்போது காய்கறிகளை வைத்து திருமணத்திற்கு அழைத்து வருவது அனைவரிடத்திலும் ஆச்சிரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.







