தென்சென்னையில் ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக, விரைவில் டெண்டர் விடப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை இந்திரா நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும், பக்கிங்ஹாம் கால்வாய் மேம்பாட்டு திட்டத்தை, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு நேரில்சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மழைக்காலம் வருவதால் ட்ரோன் மூலமாக கொசு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும், அதிக திறன் கொண்ட இயந்திரங்கள் மூலம் மூலம் ஆகாயத் தாமரையை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.
சென்னையில் உள்ள 141 கிலோமீட்டர் கால்வாய்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது எனவும் சென்னையில் மழை காலத்தில் வெள்ளபெருக்கு ஏற்படாமல் இருக்க தண்ணீர் நிற்கும் இடங்களை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “1,400 கோடி ரூபாய் செலவில், தென் சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு, மிக விரைவில் டெண்டர் விடப்படும். கடந்த ஆட்சியில் போடப்பட்ட டெண்டர்கள் முறைகேடுகள் ஆய்வில் உள்ளது. முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்த வேண்டும் என்ற சிறிய எண்ணம்கூட முதலமைச்சரிடம் இல்லை” என தெரிவித்தார்.




