ஆசிய பாரா பேட்மிண்டன் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர் விஜய், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஜப்பானின் ஆய்ச்சி – நகோயாவில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இவ்விளையாட்டுப் போட்டியில் இந்தியா பல பிரிவுகளில் பதக்கங்களை குவித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ்க்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வீராங்கனை மனிஷா ராமதாஸின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின்சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் இச்சாதனையைப் படைத்துள்ள வீராங்கனை மனிஷா ராமதாஸின் வெற்றி இளம்தலைமுறை பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும். அவர், எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.