வரும் 2047 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்த நாடாக இந்தியா இருக்கும் என திருச்செங்கோட்டில் நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாலையம் ஒன்றியம்
கோவில்பாளையத்தில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு
மோடி பொங்கல் நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் பெண்கள் பொங்கல் வைத்து
விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், பெரும்பாலும் அருந்ததியர் சமுதாய மக்களே கூடி இருந்ததால் தெலுங்கில் பொங்கல் வாழ்த்து கூறி தனது பேச்சை தொடங்கினார்.
மத்திய மோடி அரசு இந்திய மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் குடியிருக்க சொந்த
வீடு கட்ட மானியம், இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிதண்ணீர் குழாய்
என அனைத்து குடிமகன்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் மத்திய
சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.
வரும் 2047 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நூறாவது சுந்தரர் தின விழா வருவதற்குள் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்த நாடாக இந்தியா இருக்கும் என எல். முருகன் பேசினார்.







